தமிழ்நாடு அரசு தேர்வாணையம் நடத்தும் குரூப் 3க்கான தேர்வு இன்று தமிழகத்தின் முக்கிய நகரங்களில் நடந்தது. புதுக்கோட்டை மன்னர் கல்லூரியிலும் இந்த தேர்வு நடந்தது. இதை புதுகை கலெக்டர் கவிதா ராமு திடீரென ஆய்வு செய்தார். அப்போது கல்லூரி முதல்வர் திருச்செல்வன், தாசில்தார் விஜயலட்சுமி ஆகியோர் உடனிருந்தனர்.
