திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள பனையக்குறிச்சி ஏ ஆர் கே நகர் இரண்டாவது தெருவை சேர்ந்த பாலகிருஷ்ணன் மனைவி லதா (55) இவரது மகன் ரஞ்சித் (35) இவருக்கு குடிப்பழக்கம் உண்டு.
நேற்று ரஞ்சித் குடிபோதையில் தாயை தாக்கியுள்ளான். அடியை பொறுக்க மாட்டாமல் லதா திருச்சி காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்துள்ளார்.சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திருவெறும்பூர் போலீசார் லாதாவை மீட்டு, திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.ரஞ்சித்தை கைது செய்து திருவெறும்பூர் போலீசார் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரனை செய்து வருகின்றனர்.