தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகம் இந்த அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இங்கு பணிபுரியும் அரசு அலுவலர்களுக்கு சிலர் அன்பளிப்பு வழங்குவதற்காக பணம் கொண்டு வந்துள்ளதாக தூத்துக்குடி லஞ்ச ஒழிப்பு காவல் துறைக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து, லஞ்ச ஒழிப்பு காவல்துறை டிஎஸ்பி பீட்டர் பால் தலைமையிலான காவல்துறையினர் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையில் அங்கு இருந்த பொறியாளர்கள் அலுவலக பிரிவு மேற்பார்வையாளர் முத்துராமனிடம் மற்றும் ஒப்பந்த காரர்கள் மகாராஜன் மற்றும் பசலெபயல் ஆகியோரிடம் இருந்து கணக்கில் வராத ரூபாய் ஒரு லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.