தென்திருப்பதி என்று அழைக்கப்படும் கரூர்,தான்தோன்றி மலை அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் புரட்டாசி மாத கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவிழா நாள்தோறும் சுவாமி பல்வேறு வாகனத்தில் திருவீதி உலா நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு ஆளும் பல்லாக்கில் சுவாமி திருவீதி உலா நடைபெற்ற நிலையில் இன்று புரட்டாசி மாத இறுதி நிகழ்வாக இன்று ஆலய மண்டபத்தில் ஸ்ரீதேவி, பூதேவி உடனாகிய ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமிக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம்
நடைபெற்று. அதன் தொடர்ச்சியாக புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த புஷ்பாஞ்சலி நிகழ்ச்சியில் சம்பங்கி, மல்லி, முல்லை, அரளி, துளசி, ரோஜா உள்ளிட்ட பல்வேறு நறுமண பூக்களால் வேத மந்திரம் கூறியபடி புஷ்பாஞ்சலி நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தினர். அதைத் தொடர்ந்து இறுதியாக சுவாமிக்கு மகா தீபாரதனை நடைபெற்றது. ஆலயம் வருகை தந்த அனைத்து பக்தர்களுக்கும் துளசி மற்றும் மஞ்சள் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.