Skip to content
Home » திருச்சியில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை….

திருச்சியில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை….

திருச்சி, தெற்கு காட்டூர் 4 வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ராமசாமி மகன் விக்னேஷ்வரன் (26). இவர் தனது அக்கா இந்துமதியின் கணவருடன் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2 நாட்களாக வேலைக்குச் செல்லாமல் இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத போது விக்னேஸ்வரன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வெளியே சென்றிருந்து அவரது தாய் சந்திரா வீட்டின் கதவு உள்பக்கம் தாழிடப்பட்டிருப்பதை உணர்ந்து, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை திறந்து பார்த்தபோது, விக்னேஸ்வரன் தூக்கில் தொங்கியுள்ளார். இதைகண்ட அதிர்ச்சியடைந்த தாய் கதறி அழுதுள்ளார். பின்னர் திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று, டாக்டர்கள் சோனை செய்து விக்னேஷ்வரன் இறந்துவிட்டார் என தெரிவித்துள்ளார்.  இச்சம்பம் குறித்து திருவெறும்பூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!