கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள சிந்தாமணிபுதூரில் பள்ளபாளையம் பேரூராட்சி சேர்ந்த தூய்மை பணியாளர் ஒருவர் தூய்மை பணியில் ஈடுபட்டுள்ளார் அப்போது சிந்தாமணிபுதூர் சாவித்திரி கார்டன் பகுதியில் தூய்மை பணியில் ஈடுபட்டிருந்தபோது கீழே கருப்பு நிற சிறிய அளவிலான சூட்கேஸ் ஒன்று இருந்துள்ளது அந்த சூட்கேஸை திறந்து பார்த்தபோது ஏர்கன் எனப்படும் துப்பாக்கி ஒன்று இருந்துள்ளது துப்பாக்கியை பார்த்தவுடன் அதிர்ச்சி அடைந்த தூய்மை பணியாளர் துப்பாக்கியை வீட்டிற்கு எடுத்துச் சென்றுள்ளார். துப்பாக்கி கனமாக இருந்ததன் காரணமாக இது குறித்து காவல் புகார் எண்100 க்கு அழைத்து சம்பவம் குறித்து தகவல் தெரிவித்துள்ளார். அதற்குள் அந்த செய்தி சமூக வலைதளங்கள் மற்றும் உள்ளூர் whatsapp குரூப்புகளில் செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. உடனடியாக இதுகுறித்து சூலூர் காவல் நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்டு சூலூர் போலீசார் தூய்மை பணியாளர் பணியாளர் இருக்கும் பள்ளபாளையம் வீட்டிற்கு சென்று துப்பாக்கியை எடுத்து வந்துள்ளனர். பின்னர் துப்பாக்கியை சோதித்துப் பார்த்த சூலூர் போலீசார் அது ஏர்கன் எனப்படும் விளையாட்டு துப்பாக்கி என்று தெரியவந்தது இதனை அடுத்து சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்