திருச்சி மாவட்டம் மணப்பாறை தாலுகா தாழக்குளத்துப்பட்டி வி.பூசாரிபட்டியை சேர்ந்தவர் சுப்மணியன் (55). இவரது மனைவி மாலதி (50). இவர் வீட்டுக்கு அருகில் வசித்து வந்தவர், சுப்ரமணியனின் ஒன்றுவிட்ட அண்ணன் மகன் தங்கபாண்டியன் (23).
இவர்களுக்கு இடையே பூர்வீக சொத்து பிரிப்பது தொடர்பாக நீண்ட நாட்களாக பிரச்சினை இருந்துள்ளது. இதன் காரணமாக இருதரப்புக்கும் இடையே அவ்வப்போது தகராறும் ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் தங்கபாண்டியன் சொத்தை விற்பதற்கு தடையாக இருப்பதாக உணர்ந்த தம்பதியர், அவரை கொலை செய்துவிட்டால் சொத்தை எளிதாக, எந்த பிரச்சினையும் இல்லாமல் விற்றுவிடலாம் என நினைத்தனர்.
இந்த நிலையில் கடந்த 18.5.22 அன்று தங்கபாண்டியனை தம்பதியர் தீா்த்து கட்டினர். இந்த கொலை குறித்து அறிந்த வையம்பட்டி போலீசார், விசாரணை மேற்கொண்டு, சுப்ரமணியன் மற்றும் மாலதியை கைது செய்து வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு திருச்சி மாவட்ட முதலாவது கூடுதல் மாவட்ட கோர்ட்டில் நடந்து வந்தது. கொலை செய்த சுப்பிரமணியன், அவரது மனைவி மாலதி ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி சுவாமிநாதன் தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் கூடுதல் அரசு வக்கீல் சக்திவேல் ஆஜரானார்.