திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை, மாவட்ட தீயணைப்பு மற்றும் பாதுகாப்பு துறை, திருச்சிரோட்டரி சங்கங்கள் இணைந்து பாதுகாப்புடன் கூடிய பட்டாசு வெடிக்கும் செயல் விளக்க விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஜோசப் மருத்துவமனை வளாகத்தில் நடத்தியது.
ஜோசப் கண் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் பிரதீபா முன்னிலை வகித்தார்.
இதில் 30க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், கல்லூரி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தீ விபத்து ஏற்பட்டால் அதற்கு முதலுதவி மற்றும் செயல்முறை விளக்கம் குறித்து மாவட்ட தீயணைப்பு அதிகாரி ஜெகதீஷ்
பேசினார்.
இதில் மருத்துவமனை நிர்வாக அதிகாரி சுபா பிரபு, . டாக்டர் கே சீனிவாசன், மோகன் குமார், ராமச்சந்திர பாபு, முகமத் தாஜ், டாக்டர் தீபக் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் கண்களில் தீக்காயம் ஏற்பட்டால் செய்ய வேண்டிய முதலுதவி குறித்து, தீ விபத்தில் சிக்கியவர்களுக்கு முதல் உதவி செய்வது தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் 300க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவி கள் , திருச்சி ஐ டொனேஷன் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.