நாமக்கல்லில் நேற்று நடந்த அரசு விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் நவம்பர் மாதம் முதல் அனைத்து மாவட்டங்களுக்கும் நானே நேரில் சென்று பணிகளை ஆய்வு செய்வேன் என்றார். அதன் முதல்கட்டமாக கோவையில் இருந்து முதல்வர் தனது பணிகளை தொடங்குகிறார்.
கோவை விளாங்குறிச்சியில் 2.66 லட்சம் சதுர அடி பரப்பில் அமைக்கப்பட்டுள்ள எல்காட் ஐடி பார்க்கை வரும் 4ம் தேதி முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
அன்றைய தினம் நகரின் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு மற்றும் கல்வி வளங்களை மேம்படுத்தும் வகையில் கலைஞர் நூலகத்துக்கும் அடிக்கல் நாட்டுகிறார். இதற்கான விழா ஏற்பாடுகளையும், முதல்வர் ஸ்டாலினுக்கு பிரமாண்ட வரவேற்பு அளிப்பதற்கான ஏற்பாடுகளையும், கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் செந்தில் பாலாஜி செய்து உள்ளார்.