Skip to content
Home » ஜார்கண்ட் ஆஸ்பத்திரியில் தீ….டாக்டர் தம்பதி உள்பட 6 பேர் பலி

ஜார்கண்ட் ஆஸ்பத்திரியில் தீ….டாக்டர் தம்பதி உள்பட 6 பேர் பலி

ஜார்க்கண்டின் தன்பாத் மாவட்டத்தில் ஹஜ்ரா நினைவு மருத்துவமனை ஒன்று உள்ளது. இதில், குடியிருப்பு வளாகம் ஒன்றும் அமைந்து உள்ளது. அதில், டாக்டர் ஒருவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், திடீரென அவரது குடியிருப்பில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. இதில் புகை வீடு முழுவதும் பரவியுள்ளது. இந்த சம்பவத்தில் மூச்சு திணறல் ஏற்பட்டு வீட்டில் வசித்தவர்கள் அடுத்தடுத்து உயிரிழந்து உள்ளனர். அவர்களில் டாக்டர் விகாஸ் ஹஜ்ரா, அவரது மனைவியான டாக்டர் பிரேமா ஹஜ்ரா, அவர்களின் வீட்டு வேலையாளான தாரா, அவர்களின் உறவினர் ஒருவர் மற்றும் வேறொரு நபர் என 5 பேர் உயிரிழந்து உள்ளனர்.

ஹஜ்ரா நினைவு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய மற்றொரு நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளார். இதனால், மொத்தம் 6 பேர் உயிரிழந்து உள்ளனர். மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டு இருக்க கூடும் என கூறப்படுகிறது. இந்த சம்பவத்திற்கு முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் இரங்கல் தெரிவித்து உள்ளார். தீ விபத்து அதிகாலை 1 மணியளவில் நடந்து உள்ளது. இதில், 5 ஆண்கள், 2 பெண்கள் மற்றும் 2 நாய்களை தீயணைப்பு துறை மீட்டுள்ளது. கிளினிக்கில் இருந்த 25 நோயாளிகள் உடனடியாக வேறு இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். இதனால், அவர்கள் பாதுகாக்கப்பட்டனர். தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *