வேலூர் மத்திய சிறையில்டிஐஜியாக இருப்பவர் ராஜலட்சுமி, இவர் ஆயுள் தண்டனை கைதியை தன் வீட்டு வேலைக்கு பயன்படுத்தி வந்தார். அப்போது வீட்டில் நகைகள் காணவில்லை எனக்கூறி ஆயுள் கைதியை அடைத்து வைத்து சித்ரவதை செய்துள்ளார் ராஜலட்சுமி. இது குறித்து அந்த ஆயுள் கைதியின் தாயார் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
‘விசாரணையில் டிஐஜி ராஜலட்சுமி, ஆயுள் கைதியை சித்ரவதை செய்தது உண்மை என தெரியவந்தது. இது தொடர்பாக ராஜலட்சுமி உள்பட 14 பேர் மீது சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.இந்த நிலையில் , டிஐஜி ராஜலட்சுமி, கூடுதல் கண்காணிப்பாளர் அப்துல் ரகுமான். ஜெயிலர் அருள்குமரன் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து சிறைத்துறை டிஜிபி மகேஸ்வர தயாள் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சஸ்பெண்ட் யெ்யப்பட்ட டிஐஜி ராஜலட்சுமி திருச்சியிலும் பணியாற்றி உள்ளார்.