திருச்சி மாவட்டம் திருவரங்கம் தொகுதிக்கு உட்பட்டது இனாம் மாத்தூர் . இந்த கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 600 மாணவ மாணவிகள் படிக்கிறார்கள். சமீபத்தில் பெய்த மழையில் இந்த பள்ளி மைதானத்தில் தெப்பக்குளம் போல மழை நீர் தேங்கியது. இதற்கு காரணம் இந்த பள்ளி கட்டப்பட்டுள்ள இடம் ஒரு காலத்தில் குளமாக இருந்ததாம். அந்த இடத்தை போதுமான அளவு உயர்த்தாமல் கட்டடம் கட்டியதால் இன்னும் பள்ளிக்கூடம் பள்ளத்துக்குள்ளேயே இருப்பதால் இந்த நிலை .
அதுமட்டுமல்ல, இந்த மேல்நிலைப்பள்ளியில் போதுமான வகுப்பறைகள் இல்லை. மொத்தமே 11 வகுப்பறைகள் தான் உள்ளது. அதில் 2 வகுப்பறைகள் ஒரு தனியார் நிறுவனம் கட்டிக்கொடுத்தது. இந்த பள்ளிக்கு குறைந்த பட்சம் 20 வகுப்பறைகள் வேண்டும் என்ற நிலையில் 11 வகுப்பறைகளைக் கொண்டு சமாளிக்கிறார்கள். சோதனைக்கூடங்கள் வசதியும் இங்கு இல்லை.
இதனால் பல வகுப்புகள் வராண்டாவிலும், திறந்தவெளியிலும் தான் நடக்கிறது. கூடுதல் வகுப்பறைகள் கட்டவேண்டும் என பெற்றோர் தரப்பில் கல்வித்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர். அதற்கு கல்வித்துறையோ, இது குளத்திற்குள் கட்டப்பட்ட பள்ளிக்கூடம் எனவே கூடுதல் வகுப்பறைகள் கட்ட வாய்ப்பு இல்லை. பள்ளிக்கூடத்தையே வேறு இடத்திற்கு தான் மாற்றவேண்டும் என தெரிவித்து உள்ளனர்.
நீர் நிலைகளுக்குள் கட்டிடம் எழுப்பக்கூடாது என கோர்ட்டுகள் பல முறை கூறிவரும் நிலையில், குளத்திற்குள் பள்ளிக்கூடம் கட்டியது முதல் தவறு. அதற்காக அங்கு படிக்கும் மாணவ, மாணவிகளை வராண்டாவிலும், திந்த பகுதியை சேர்ந்மாணவ, மாணவிகள் பாதிக்கப்படுவார்கள். எனவே இதே பகுதியில் நவீன வசதிகளுடன் கூடுதல் கட்டிடங்கள் கட்ட வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை வைக்கிறார்கள்.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் சொந்த மாவட்டத்தில் இப்படி வராண்டா பள்ளிக்கூடம் நடப்பது தான் வருத்தமாக இருக்கிறது , இதற்கு அமைச்சர் தீர்வு காணவேண்டும் என பெற்றோர், மாணவ மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.