Skip to content
Home » விஜய் மாநாட்டு முகப்பு……புனித ஜார்ஜ் கோட்டை போல அமைப்பு…. மழையை நிறுத்த யாகம்

விஜய் மாநாட்டு முகப்பு……புனித ஜார்ஜ் கோட்டை போல அமைப்பு…. மழையை நிறுத்த யாகம்

 நடிகர் விஜயின்  தமிழக வெற்றிக் கழகத்தின் முதல்மாநில மாநாடு, விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில்  வரும் 27-ம் தேதி நடைபெற உள்ளது. 85 ஏக்கர் பரப்பளவு உள்ள இடத்தில், மாநாட்டுக்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மாநாட்டு மேடை 60 அடிஅகலம், 170 அடி நீளத்தில் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது உள்அலங்கரிப்பு பணி நடைபெறுகிறது. திடலில் பார்வையாளர்கள் அமரும் இடங்களில், பகல்போல் ஜொலிக்கதிடல் முழுவதும் 15 ஆயிரம் ஹை மாஸ் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது.

திடலின் இருபுறமும் மொபைல் கழிப்பறை அமைக்க 300 தடுப்புகள் ஏற்படுத்தி உள்ளனர். மாநாட்டு முகப்பு செயின்ட் ஜார்ஜ் கோட்டை போல அமைக்கப்படுகிறது. திடலைச் சுற்றி தகர தகடுகளால் மறைப்பு ஏற்படுத்தியுள்ளனர். மாநாட்டு மேடைக்கு விஜய் மற்றும்சிறப்பு அழைப்பாளர்கள் வருவதற்கு தனி சாலை அமைக்கப்பட்டுள்ளது. தற்போது மாநாட்டுத் திடலுக்குள் யாரும் வர முடியாதபடி, பவுன்சர்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். மாநாடு நடைபெறும் பகுதிக்கு அருகாமையில் உள்ள விவசாய நிலங்களுக்கு செல்ல முற்பட்ட விவசாயிகளையும் பவுன்சர்கள் தடுத்தி நிறுத்தியுள்ளனர்.

திடலின் உள்ளே செல்லும் மின் ஒயர்களை அகற்றி கேபிளாக பூமியில் புதைக்க மின்வாரியம் அனுமதி அளிக்கவில்லை. மாநாட்டுக்குத் தேவையான மின்சாரம் ஜெனரேட்டர்கள் மூலம் வழங்கப்பட உள்ளதாகத் தெரிகிறது. பாதுகாப்பு கருதி மாநாடு நடைபெறும் பகுதியில் உள்ள கிணறுகளை, இரும்பு கார்டர்கள் மீது மரப்பலகைகள் அமைத்து மூடப்படுகின்றன. தொண்டர்களுக்கு மாநாட்டுதிடலில் உணவு வழங்க திட்டமிட்டப்பட்டிருந்தது. ஆனால், கூட்ட நெரிசல் ஏற்படும் எனக்கருதி, மாநாட்டுக்கு வரும் வாகனங்களிலேயே உணவு வழங்க திட்டமிட்டுள்ளனர்.

இதற்கிடையே, மாநாடு நடைபெறும் நாளன்று மழை பெய்யாமல் இருக்க நேற்று அதிகாலை தவெக சார்பில் யாகம் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!