Skip to content
Home » சுமார் 280 நாட்கள் 40 ஆயிரம் கிலோ மீட்டர் ஓட்டம்…கோவை பாய்ஸ்ட்ரஸ் ரன்னிங் குழுவினர் அசத்தல்…

சுமார் 280 நாட்கள் 40 ஆயிரம் கிலோ மீட்டர் ஓட்டம்…கோவை பாய்ஸ்ட்ரஸ் ரன்னிங் குழுவினர் அசத்தல்…

  • by Senthil

கோவையில் தினமும் காலை மற்றும் மாலை ஓட்டம் மற்றும் நடை பயிற்சி செய்பவர்கள் இணைந்து பாய்ஸ்ட்ரஸ் எனும் ரன்னிங் குழுவை உருவாக்கி உள்ளனர்..

இளம் வயது,நடுத்தர மற்றும் மூத்தோர் என 160 க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்டு, ஓட்டத்திறன் வளர்ப்பு, ஆரோக்கிய வாழ்வை மையமாக வைத்து இந்த குழு இயங்கி வருகின்றது..

இந்நிலையில் உடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக , பாய்ஸ்ட்ரஸ் குழுவினர் கோ ஃபிட் 2024 (GO FIT)எனும் புதிய மெகா சேலஞ்ச் போட்டியை கடந்த ஜனவரி மாதம் துவங்கினர்.

அதன் படி,சுமார் ஐம்பதிற்கும் மேற்பட்டவர்கள் இணைந்து தினமும் ஓட்டம் மற்றும் நடை பயிற்சியில் தங்களை இணைத்து கொண்டு போட்டிகளில் கலந்து கொண்டனர்..

சுமார் 280 நாட்கள் தொடர்ந்து 40 ஆயிரம் கிலோ மீட்டர் தூரமாக ஓடி தங்களது திறன்களை வெளிப்படுத்திய நிலையில்,
இதற்கான நிறைவு மற்றும் பரிசு வழங்கும் விழா கோவை ராம் நகர் பகுதியில் உள்ள விஜய் பார்க் இன் ஓட்டல் அரங்கில் நடைபெற்றது..

பாய்ஸ்ட்ரஸ் குழுவின் தலைவர் விஜய் பார்க் இன் ஓட்டல் நிர்வாக இயக்குனர் கோவை ரமேஷ், செயலாளர் டாக்டர். வேலாயுதம் மற்றும் பொருளாளர் வேதநாயகம் ஆகியோர் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற விழாவில் சிறப்பு விருந்தினராக கோவை மாநகர காவல் துறை ஆணையர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு போட்டிகளில் கலந்து கொண்டவர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கி கவுரவித்தார்.

விழாவில் கவுரவ அழைப்பாளராக ஸ்ரீதேவி டெக்ஸ்டைல்ஸ் மேலாண்மை இயக்குனர் சிவகணேஷ் கலந்து கொண்டு பாய்ஸ்ட்ரஸ் குழுவினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்..

இளம் வயதினர் முதல் 40 வயதைக் கடந்தவர்களும் பெருவாரியாகப் பங்கேற்ற குழுவினர் கூறுகையில், தனிப்பட்ட முறையில் தங்களின் ஆரோக்கியத்தைப் பேணிக் காக்கவும், நோய் நொடியின்றி நாள் முழுவதும் தங்களைப் புத்துணர்வாக வைக்கவும் இந்தப் போட்டி மிகவும் உதவியதாகவும், இனிவரும் ஆண்டுகளிலும் இது போன்ற போட்டிகளை தொடர்ந்து நடத்த வேண்டும் என்றும் கூறினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!