Skip to content
Home » டில்லி குண்டு வெடிப்பு….. காலிஸ்தான் கைவரிசையா?

டில்லி குண்டு வெடிப்பு….. காலிஸ்தான் கைவரிசையா?

  • by Senthil

டில்லியின் ரோகினி பகுதியில் உள்ள பிரசாந்த் விகாரில் உள்ள சிஆர்பிஎஃப் பள்ளி சுற்றுச்சுவர் அருகில் மர்மமான பொருள்  நேற்று வெடித்தது. இந்தத் தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றாலும் பள்ளிச்சுவர், அதன் அருகில் உள்ள கடை மற்றும் வாகனம் சேதமடைந்தது. இதனைத் தொடர்ந்து தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ), தேசிய பாதுகாப்புப் படை (என்எஸ்ஜி), மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்) மற்றும் டெல்லி போலீஸார் அந்தப் பகுதியை சீல் வைத்தனர். தடயவியல் நிபுணர்கள் மாதிரிகளை சேகரித்ததும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

நேற்று  மாலையில் ‘காலிஸ்தான் ஜிந்தாபாத்’ என்ற வாட்டர் மார்க்குடன், வெடிப்புச் சம்பவம் குறித்த செய்தி இடம்பெற்றிருந்தது. அந்தச் செய்தியில், “இந்தியாவின் கோழை ஏஜென்சிகளும் அவர்களின் எஜமானர்களும் குண்டர்களை அமர்த்தி எங்கள் உறுப்பினர்களின் குரல்களை அடக்கிவிடலாம் என்று நினைத்தால் அவர்கள் முட்டாள்களின் உலகில் வாழ்க்கிறார்கள். நாங்கள் அவர்களுக்கு எவ்வளவு நெருக்கமாக இருக்கிறோம், எந்த நேரத்திலும் தாக்கும் திறனுடன் இருக்கிறோாம் என்பதை அவர்களால் கற்பனை செய்யக்கூட முடியாது. #காலிஸ்தான் ஜிந்தாபாத், #ஜெஎல்ஐ” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

பிரிவினைவாத காலிஸ்தான் தீவிரவாதிகளின் உலகளாவிய இந்திய எதிர்ப்பு நிலைப்பாட்டுக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை, குறிப்பாக கனடாவுனான உறவில் சமீபத்தில் ஏற்பட்டிருக்கும் விரிசல் போக்கு பின்னணியைக் குறிப்பிடுவது போல் இந்தப் பதிவு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!