பாஜகவில் இருந்து விலகி, அதிமுகவில் சேர்ந்த நடிகை கவுதமிக்கு தற்போது அந்த கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதிமுக கொள்கை பரப்பு துணை செயலாளராக கவுதமி நியமிக்கப்பட்டுள்ளார்.
அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளராக தடா பெரியசாமி நியமனமிக்கப்பட்டுள்ளார். இவரும் பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கான அறிவிப்பை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார்.