திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி வடக்கு மலை அய்யம்பட்டி சாலை சாமி தெருவை சேர்ந்தவர் வடிவேல் இவரது மகன் கிருஷ்ணகுமார் (12) இவன் பெல் வளாகத்தில் உள்ள ஒரு பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தான்
நேற்று வீட்டில் உடைகளை அயன் செய்வதற்காக அயன் பாக்ஸ் பிளக்கை சொருகியபோது மின்சாரம் தாக்கியது இதில் கிருஷ்ணகுமார் பலத்த காயமடைந்து சாய்ந்தான். வீட்டில் உள்ளவர்கள் அவனை துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு கிருஷ்ணகுமாரை பரிசோதித்த போது கிருஷ்ணகுமார் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். துவாக்குடி போலீசார் விசாரணை நடத்தினர்.