திருச்சி, ஜோசப் கண் மருத்துவமனை மற்றும் ஜமால் முகமது கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் காவல் துறையினர் இணைந்து மாபெரும் பார்வையில் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு தெருக்கூத்து நாடகம் நடத்தினர். இந்த வீதி நாடகம் திருச்சி மாவட்டத்தில் முக்கிய இடங்களில் இந்த வாரம் முழுவதும் நடைபெற உள்ளது.
பார்வையில பூ தடுப்புக்கான சர்வதேச அமைப்பின் கூற்றுப்படி 2020ஆம் ஆண்டு 43மில்லியன் மக்கள் பார்வையாளர்களாக உள்ளனர். 257 மில்லியன் மக்கள் லேசான பார்வை உடையவர்களாகவும் 57 பேர் presbyopia -வால் பாதிக்கப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே, இந்த விழிப்புணர்வை மக்களுக்கு உணர்த்தும்
வகையில் இந்த வீதி நாடகம் நடைபெற்றது. தெருக்கூத்து நாடகத்தில் சர்க்கரை நோயினால் கண்களில் ஏற்படும் விழித்திரை தொடர்பான நோய்கள், கண்புரை மாறுகண், கண்ணீர் அழுத்தம் போன்ற நோய்கள் குறித்தும் இதனால் ஏற்படும் பார்வையில் தடுப்பது என்பது குறித்து மக்களுக்கு நடித்து காண்பிக்கப்பட்டது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
இவ்விழிப்புணர்வு தெருக்கூத்து நாடகத்தை திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் சத்யபிரியா தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் ஜோசப் கண் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் பிரதீபா, ஜமால் முகமது கல்லூரி முதல்வர் இஸ்மாயில் மெய்தீன், செயலாளர் காஜா மெய்தீன் மற்றும் திருச்சி காவல்துறை உதவியாளர் சுரேஷ்குமார், மாநகர காவல் துறை நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையர் செந்தில்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். விழிப்புணர்வுக்கான ஏற்பாடுகளை ஜோசப் கண் ஆஸ்பத்திரி நிர்வாக அலுவலர் சுபாபிரபு மற்றும் திருச்சி காவல் துறை அலுவலர் நவநீதகிருஷ்ணன் ஆகியோர் செய்து இருந்தனர்.