Skip to content
Home » பாகிஸ்தானை மிரட்டும் போலியோ…..39 பேர் பாதிப்பு

பாகிஸ்தானை மிரட்டும் போலியோ…..39 பேர் பாதிப்பு

  • by Senthil

பாகிஸ்தானில் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு மருந்து அளிப்பது மதத்துக்கு எதிரானது என்று அந்த நாட்டின் தெஹ்ரீக்-இ-தலிபான் உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகள் கூறி வருகின்றன. இதன் காரணமாக, போலியோ தடுப்பு மருந்துப் பணியாளா்கள் மற்றும் அவா்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் படையினரைக் குறிவைத்து அடிக்கடி பயங்கரவாதத் தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. இதில் ஏராளமானவா்கள் உயிரிழந்தும் வருகின்றனா்.

இந்த நிலையில், பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் மேலும் இரு சிறுவா்களுக்கு போலியோ தொற்று கண்டறியப்பட்டதைத் தொடா்ந்து இந்த ஆண்டில் மட்டும் அங்கு அந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 39ஆக உயர்ந்துள்ளது. அவற்றில் பலுசிஸ்தானிலிருந்து 20 பேரும், சிந்துவிலிருந்து 12 பேரும், கைபர் பக்துன்க்வாவில் 5 பேரும், பஞ்சாப் மற்றும் இஸ்லாமாபாத்திலிருந்து தலா ஒருவருக்கும் போலியோ பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தான் போலியோ திட்டத்தின் கீழ் ஐந்து வயதுக்குட்பட்ட 45 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதற்காக அக்டோபர் 28 முதல் நாடு தழுவிய புதிய தடுப்பூசி முகாம்கள் நடத்த  திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. உலக சுகாதார அமைப்பின் அறிக்கைப்படி, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மட்டுமே போலியோ நோய் பரவியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!