திருச்சி மாவட்டத்தில் பணிபுரியும் பத்திரிகையாளர்களுக்காக புதிதாக ஒரு சங்கம் உதயமாகி உள்ளது. இந்த சங்கத்தின் பெயர் ‘திருச்சி பத்திரிகையாளர் சங்கம்’ (TPS).பதிவு எண் 125/2024.
அனைத்து பத்திரிகையாளர்களையும் நல வாரியத்தில் சேர்ப்பது, ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்க உரிய நடவடிக்கை எடுப்பது, பத்திரிகையாளர்களுக்கு அரசு சார்பில் சலுகை விலையில் வழங்கப்படும் வீட்டு மனைகளை முறைப்படி பெற உரிய நடவடிக்கை
எடுப்பது உள்ளிட்ட பணிகளே இச்சங்கத்தின் பிரதான நோக்கமாகும்.
திருச்சியில் இருந்து வெளியாகும் நாளிதழ் மற்றும் பருவ இதழ்கள், செய்தி தொலைக்காட்சிகளில் பணியாற்றும் செய்தி ஆசிரியர்கள், துணை ஆசிரியர்கள், நிருபர்கள், போட்டோகிராபர்கள், கேமரா மேன்கள், புரூப் ரீடர்கள், லேஅவுட் ஆர்டிஸ்ட் உள்ளிட்ட உழைக்கும் பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் உறுப்பினர் சேர்க்கையில் முன்னுரிமை அளிக்கப்படும். இச்சங்கத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் விரைவில் நடத்தப்பட உள்ளது. அதில் சங்க நிர்வாகிகள் மற்றும் நிர்வாகக்குழு தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்படுவார்கள்.