கரூர் மாவட்ட பெரியார் திராவிட கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கரூர் பிரதட்சணம் சாலையில் உள்ள அரசு ஊழியர்கள் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. பொதுச்செயலாளர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கொளத்தூர் மணி… தற்போது ஆளுநர் சனாதன எதிர்ப்பு பற்றி பேசி வருகிறார், அதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் வரும் 30ம் தேதி காந்தி படுகொலை செய்யப்பட்டது குறித்த பொதுக்கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளோம். ஓட்டுக்கு பணம் கொடுப்பவர்களை பற்றி பேசாமல் தமிழகத்தில் வாக்குகள் விலை மதிப்பற்றது.விலைக்கு கொடுக்க மாட்டோம் என்பதை பொதுமக்களிடம் எடுத்து சென்று அவர்களை மாற்ற முயற்சிக்க வேண்டும். இது தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். வறுமையில் உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா 107 வது இடத்தில் இருக்கிறது. கணக்கெடுக்கப்பட்ட 124 நாடுகளில் இந்தியாவிற்கு 107வது இடம் முன்னேறியது என்பதற்கு வாய்ப்பு இல்லை. அரசு விமானமே இல்லாத நாடாக இந்திய மாறியுள்ளது. பொதுத் துறை நிறுவனங்கள் தனியாரிடம் விற்கப்படும் போது இந்தியா எவ்வாறு முன்னேறிய நாடாக இருக்க முடியும் என்றார்.