இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை.. மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் , அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. தொடர்ந்து அக்டோபர் 23ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற உள்ளது. புயல் உருவாகி, தமிழக கடற்கரை பகுதிகளை விட்டுவிலகி, ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தை நோக்கி நகரும். இதனால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இருக்காது. புயலுக்கு கத்தார் பரிந்துரைத்த ‘டானா’ என பெயரிடப்பட்டு உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு வடகிழக்கு பருவமழை காலத்தில் உருவாகும் முதல் புயல் இதுவாகும்.