சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி, ஈரோடு, திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று(அக்.,20) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. கோவை, திருப்பூர் மற்றும் திண்டுக்கல் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் நாளை (அக்.,21) ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், மதுரை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பரவலாக கனமழை பதிவாகி உள்ளது. (மில்லி மீட்டரில்) விபரம் பின்வருமாறு.. கள்ளக்குறிச்சி- 85, எழுமலை- 84.4, மதுராந்தகம் – 80.4, கருங்காலகுடி 79.6, எல்.என்.பட்டி 79.2, உத்தப்பநாயக்கனுார் 76, திருவலம் 70.4, குலசேகரன்கொட்டாய் 68, ஆற்காடு 66.8, மேட்டூர் 64.8, அடையார் 64.8, சங்கராபுரம் 64, லால்குடி 62, பாம்பார் அணை 60, காவேரிப்பாக்கம் 57.2, மேல்பாடி 56.8, இந்திலி 55.6, மேலவளவு 53.2, திம்மரச நாயக்கனுார் 51.6, ராணிப்பேட்டை 49.2, திருப்போரூர் 47, கோடம்பாக்கம் 45.4, தேனாம்பேட்டை 41.2, ஊத்தங்கரை 39, அண்ணா பல்கலை 37.6, நிலக்கோட்டை 37.2, வைகை அணை 36.8, ஊட்டி 36.5, ஓசூர் 35