காலியாக உள்ள கேரளமாநிலம் வயநாடு லோக்சபா தொகுதிக்கு நவம்பர் 13ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்தது. இந்த அறிவிப்பை தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாவின் மகள் பிரியங்கா அறிவிக்கப்பட்டார். இந்த அறிவிப்பு வந்த உடனே காங்கிரஸ் கட்சியினர் தங்களின் பிரசாரத்தை தொடங்கி விட்டனர். முதல்முறையாக தேர்தலில் போட்டியிடும் பிரியங்காவை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் சார்பில், மூத்த தலைவர் சத்யன் மோகெரி வேட்பாளராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து பா.ஜ., சார்பில் யார் களமிறங்குவார் என எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், கேரள மாநில பா.ஜ., மகளிர் அணி பொதுச்செயலாளர் நவ்யா ஹரிதாஸ் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மெக்கானிக்கல் இன்ஜினியரான நவ்யா ஹரிதாஸ், கோழிக்கோடு மாநகராட்சி கவுன்சிலராக இருந்தவர் என்பது குறிப்பிடதக்கது.