திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் புகைபிடித்தபோது வீட்டில் இருந்த பட்டாசுகள் வெடித்து ஒருவர் உயிரிழந்தார். சிகரெட் தீப்பொறியால் பட்டாசு வெடித்ததில் பெரிய ராவுத்தர் தெருவை சேர்ந்த சாகுல் ஹமீது (47) உயிரிழந்தார். வேடசந்தூர் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து பட்டாசுகளை அகற்றி சாகுல் ஹமீத் உடலை மீட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில்பெரும் பரபரப்வை ஏற்படுத்தியது. மேலும் போலீசார் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
