1063 ஆண்டுகள் பழமையான பாபநாசம் அருகே கோவில் தேவராயன் பேட்டை ஶ்ரீ சுகந்த குந்தளாம்பிகை சமேத ஸ்ரீ மச்சபுரீஸ்வரர் ஆலயத்தின் போக சக்தி தெய்வத் திருமேனி நியூயார்க்கில் உள்ள சோதெபி தொல்பொருள் ஏலக் கூடத்தில் ரூ 9 கோடிக்கு ஏலம் விடப்படவுள்ளதை தடுத்து, மீட்டெடுத்து கோவிலில் மீண்டும் பிரதிஷ்டை செய்திட வேண்டி, கோரிக்கையை கோயிலில் உள்ள தர்ம விநாயகர், ஸ்ரீ சுகந்த குந்தளாம்பிகை அம்மனின் பாதத்தில் கிராம மக்கள் வைத்தனர். இதில் ஓய்வு ஐ.ஜி பொன் மாணிக்கவேலு பங்கேற்றார். இதன் பின்னர் கருவறை, பிரகாரம், அம்மன் சன்னதியில் வழிபட்டார். கிராம மக்களிடம் இந்தக் கோயில் ஆரம்பக் கால சோழர்கள் கட்டியது என விளக்கினார். உற்சவம் என்றால் என்ன என்று கேள்வி கேட்டு விளக்கினார். ஒரு வருடத்தில இந்தச் சிலையை கொண்டு வர ஜனநாயக முறையில பிரஷர் கொடுக்க வேண்டும். பாதுகாக்கப் பட்ட புராதன கோயில் என்று பிரகடனப் படுத்த வேண்டும் என்றார். உங்கள் வீடுகளில்
அமைதி, செல்வம் இருக்க வேண்டும் என்றார். பிரகாரத்தில் இருந்த பெருமாள் சிலையைப் பார்த்து அழகு என வியந்தார். இதில் பங்கேற்ற கிராம மக்கள் கூறுகையில் கோயிலில் இருந்த போக சக்தி அம்மன் திருமேனி 1974 ம் ஆண்டில் வழிப் பாட்டில் இருந்தது. 1993 ம் வருடத்திற்கு முன்னால் அமெரிக்காவிற்கு கள்ளத் தனமாக ஏற்றுமதி செய்யப் பட்டு விட்டது. தற்போது நியூ யார்க்கில் மேன்ஹாட்டன் நகரத்தில் உள்ள சோ தெபி ஏலக் கூடத்தில் உள்ளது. இதற்கு முன்னர் கலிபோர்னியா சாந்தா பார்பாரா நகரில் காட்சிப் பொருளாக உள்ளது. இந்தக் கோவில் பராந்தகத் தேவரால் 1063 வருடங்களுக்கு முன் கட்டப் பட்டது. ஏலம் விடப் படப் படுவதை மத்திய, மாநில அரசுகள் தடுத்து நிறுத்த வேண்டும். இந்த அம்மனுக்கு பதில் போலி தெய்வத் திருமேனி செய்யப் பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. இக் கோவிலில் தெய்வத் திருமேனிகள் களவுப் போவதை தடுக்க ஐடல் ஸ்ட்ராங் ரூம் 6 மாதத்திற்குள் கட்ட வேண்டும்.
கோயில் பிரகாரம் அருகில் அகழ்ந்தெடுக்கப் பட்ட 14 உலோக தெய்வத் திருமேனிகளை இக்கோயிலில் நிறுவி உற்சவ திருவிழாக்களை நடத்த வேண்டும் என்றனர். முன்னாள் ஐஜி பொன் மாணிக்க வேலு செய்தியாளர் சந்திப்பில் கூறும் போது….. இந்த கோயில் 1063 வருடத்திற்கு முன்பு கட்டியது. ஆரம்ப கால சோழர்களான பராந்தகனால் கட்டப் பட்டது. தெய்வத் திருமேனி கள்ளத்தனமாக ஏற்றுமதி செய்துள்ளனர். நாம் கோட்டை விட்டுட்டோம். ஏலம் விடத் தயாராக இருக்கிறது. ஏலத்தை நிறுத்த வேண்டும். இது தொடர்பாக எம்.எல்.ஏ., எம்.பி., சி.எம். ஆபிஸ்க்கு மெயில் அனுப்பப் போறேன். ஏலத்தை நிறுத்த ஹை கமிஷனர் பிரஷர் தர வேண்டும்.
தெய்வ விக்கிரகத்தை கொண்டு வருவதுடன், இங்கே தான் இருக்க வேண்டும். அரசுக்கு கோயில் சார்பில் 656 கோடி வரி கட்டப் படுகிறது. பழைய கேஸ் என்றாலும், இதை ரீ ஓபன் செய்ய வேண்டும். கோயில் பிரகாரம் அருகில் 14 தெய்வ விக்கிரகம் எடுக்கப் பட்டதை 12 என கணக்கில காட்டறாங்க. இந்து சைவர்கள் சாப்ட்டா இருக்காங்க. 14 விக்கிரகங்களும் திரும்ப வரணும். கோயிலில் வைக்க வேண்டும் என்றார். நான் பதவியில் இருந்த 2012 லிருந்து 2622 தெய்வ விக்கிரகங்களை சீஸ் பண்ணியுள்ளேன். இங்கு எடுக்கப் பட்ட தெய்வ விக்கிரகங்களை திருவாரூர் தாலுக்கா ஆபிஸ்ல குப்பையா போட்டு வைச்சிருக்காங்க. இந்த 14 விக்கிரகங்களையும் 6 மாதத்தில திருப்பி கொண்டு வந்து வைக்க வேண்டும் என்றார். முன்னாள் ஐ.ஜி மாணிக்க வேலுடன் டாக்டர் சக்தி பாபு, லயன்ஸ் கிளப் மாவட்டத் தலைவர் முத்தமிழ்ச் செல்வம், கிராம மக்கள் உடனிருந்தனர். பட விளக்கம்: போக சக்தி திருமேனியை மீட்க கிராம மக்கள் தர்ம விநாயகர் முன் கோரிக்கை வைத்தனர்