தமிழ் திரை உலகில் 21 ஆண்டுகளாக தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை கொண்டவர் திரிஷா. தற்போது அஜித்துடன் விடாமுயற்சி, குட் பேட் அக்லி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். கமலுடன் தக் லைஃப் படத்திலும் நடித்துள்ளார். சினிமாவை தாண்டி திரிஷா தோழிகளுடன் ஜாலியாக பொழுதை கழிப்பதை மிகவும் விரும்புவார்.
அடிக்கடி தோழிகளுடன் பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஒன்றாக சேர்ந்து குதூகலமாக இருப்பது திரிஷாவிற்கு பிடித்த விஷயம். அந்த வகையில் திரிஷா- விஜய் நடித்த தி கோட் பட தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி மற்றும் தோழிகளுடன் வெளிநாடுகளுக்கு ஜாலியாக சுற்றுலா சென்றுள்ளார். அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டார் திரிஷா.