சேலம் கலைஞர் மாளிகையில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது: நாளை மாலை சேலம் வரும் துணை முதலமைச்சர் நாளை மாலை சேலம் வருகிறார். துணை முதல்வராக பதவியேற்றதும் முதன்முதலாக வருகை தரும் துணை முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.
இரவு சேலத்தில் தங்கும் துணை முதல்வர் தொடர்ந்து மறுநாள் காலை 10 மணி அளவில் நேரு கலையரங்கில் நடைபெறும் விழாவில் பங்கேற்று கலைஞர் விளையாட்டு உபகரணங்களை வழங்குகிறார்.சேலம் மாவட்டத்தில் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஊராட்சிகளுக்கு வழங்கப்படுகிறது குறிப்பாக சேலம் மாவட்டத்தில் 385 ஊராட்சிகளுக்கும் நாமக்கல் மாவட்டத்தில் 325 ஊராட்சிகளுக்கும் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட உள்ளது.
அதன் பின்பு திமுக இளைஞர் அணி மாநில ,மாவட்ட நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் கூட்டத்தை நடத்துகிறார்.அதனைத் தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டத்திற்கு செல்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது சேலம் எம்.பி. செல்வகணபதி, மாவட்ட செயலாளர் எஸ்.ஆர். சிவலிங்கம் ஆகியோர் உடனிருந்தனர்.