கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பள்ளப்பட்டி பகுதியில் ஏராளமான நாய்கள் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் குழந்தைகள் பொதுமக்களை அனைவரையும் ஒன்று சேர்ந்து துரத்தி கடித்து வருவதாக அப்பகுதி பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திடம் மற்றும் அரசு அதிகாரிகளிடமும் பலமுறை புகார் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் பள்ளப்பட்டி சுக்கான் குழி பகுதியில் 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அமைந்துள்ளது அதே பகுதியைச் சேர்ந்த சதாம் என்பவர் நான்கு ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். இந்த நிலையில் இன்று மதியம் ஒரு மணி அளவில் வீட்டில் வெளியே இருந்த ஒரு ஆட்டுக்குட்டியை நான்கு நாய்கள் ஒன்று சேர்ந்து துரத்தி துரத்தி கடித்து குதறி உள்ளது.
அந்த வழியாக சென்று கொண்டிருந்த நபர் ஒருவர் பார்த்து நாய்களை விரட்டி உள்ளார் நான்கு நாய்கள் ஒன்று சேர்ந்து ஒரு ஆட்டுக்குட்டியை கடித்ததில் ஆடு உயிரிழந்துள்ளது. தற்போது நாய்கள் ஆட்டுக்குட்டியை கடிக்கும் சிசிடிவி வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. இதேபோல் பள்ளப்பட்டி பகுதியில் கடந்த 09.01.24 தேதி ஒரு சிறுமையை மூன்று மேற்பட்ட நாய்கள் கடிக்க துரத்திய சம்பவம் நடைபெற்ற நிலையில், தற்போது ஒரு ஆட்டுக்குட்டியை நான்கு நாய்கள் கடித்துக் குதறிய வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பள்ளப்பட்டி நகராட்சி நிர்வாகம் நாய் தொல்லையை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்களின் பல ஆண்டுகால கோரிக்கையாக உள்ளது.