Skip to content
Home » குட் வொர்க்….. தமிழக அரசை பாராட்டிய டாக்டர் ராமதாஸ்

குட் வொர்க்….. தமிழக அரசை பாராட்டிய டாக்டர் ராமதாஸ்

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில்…..தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் அச்சத்துடன் எதிர்பார்க்கப்பட்ட மாண்டஸ் புயல் பெரிய அளவில் சேதங்களை ஏற்படுத்தாமல் கரையை கடந்து சென்றிருக்கிறது. பெரிய அளவில் பாதிப்புகள் இல்லாததால் பெரும்பான்மையான மக்கள் அச்சத்திலிருந்து விடுபட்டு நிம்மதி அடைந்துள்ளனர். புயலை எதிர்கொள்ள தமிழக அரசு போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சாய்ந்து விழுந்த மரங்கள் உடனடியாக அகற்றப்படுகின்றன. மின் இணைப்பும் அதிகமாக துண்டிக்கப்படவில்லை. அதற்காக பாராட்டுகள் என்று டிவிட் செய்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *