Skip to content
Home » திருச்சியில் வளர்ச்சி ஒருங்கிணைப்பு குழு-கண்காணிப்பு குழு கூட்டம்…. 3 எம்பிக்கள் பங்கேற்பு…

திருச்சியில் வளர்ச்சி ஒருங்கிணைப்பு குழு-கண்காணிப்பு குழு கூட்டம்…. 3 எம்பிக்கள் பங்கேற்பு…

திருச்சி மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு குழு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது இந்த கூட்டத்தில் திருச்சி எம் பி துரை வைகோ, பெரம்பலூர் எம்பி அருண் நேரு, கரூர் எம்பி ஜோதிமணி, திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் மற்றும் அரசு அதிகாரிகள் மக்கள் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

திருச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் மத்திய மாநில அரசுகளின் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது திட்டங்களை விரைந்து முடிப்பது உள்ளிட்டவை குறித்தும் அதில் உள்ள சிக்கல்கள் குறித்தும் ஆராயப்பட்டது.

கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய திருச்சி எம்.பி துரை வைகோ

ஒன்றிய அரசால் மாவட்டத்தில் நடைபெறும் திட்டங்கள் குறித்து ஆய்வு நடைபெற்றது துறை சார் அலுவலர்களுடன் ஆலோசனை செய்யப்பட்டு துறைகளில் உள்ள குறைகள் கேட்டறியப்பட்டு அவற்றை சரி செய்வதற்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

மத்திய மாநில அரசியலின் திட்டங்கள் அனைத்து மக்களுக்கும் சென்று சேரும் வகையில் களப்பணியாற்றியிட அனைத்து துறை அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

சாலைகளில் விபத்துக்கள் நடைபெறும் இடங்கள் குறித்தும் காவல்துறையினர் இன்றைய கூட்டத்தில் விளக்கினார்கள். விபத்துக்கள் ஓட்டுனர்களின் கவனக்குறை வாழும் ஏற்படுகிறது அந்தப் பகுதிகளில் இருக்கும் கட்டமைப்பு குறைபாட்டாலும் ஏற்படுகிறது.
இது குறித்து எல்லாம் தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகளும் கேட்கப்பட்டது.

தேசிய நெடுஞ்சாலைகளில் மின் விளக்குகள் வைக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

ஒன்றிய அரசின் முக்கியமான திட்டங்களில் ஒன்று மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டம். அந்தத் திட்டத்தில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் ஆண்டுதோறும் நிதி ஒதுக்குவதை குறைத்து வருகிறார்கள்.

குறைவான அளவில் நிதி ஒதுக்கினாலும் தமிழ்நாட்டு பொருத்தவரை மக்களுக்கு தேவையான ஊதியம் கிடைக்கும் வகையில் தமிழ்நாடு அரசு கூடுதல் நிதி ஒதுக்கி தொகையை மாநில அரசின் நிதியிலிருந்து வழங்குகிறார்கள்.

இருந்த போதும் திருச்சி மாவட்டத்தில் சில இடங்களில் அந்தத் திட்டத்தில் வேலை வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இந்தத் திட்டத்தில் நூறு நாட்கள் முழுமையாக வேலை வழங்கி நிதியை குறைக்காமல் முழுமையாக வழங்க வேண்டும் என இந்தியா கூட்டணி சார்பில் கோரிக்கை வைத்துள்ளோம் ஆனால் ஒன்றிய அரசு அதற்கு செவி சாய்க்காமல் உள்ளது.

நிதி குறைப்பு இருந்த பொழுதும் அந்தத் திட்டம் தமிழ்நாட்டில் குறிப்பாக திருச்சி மாவட்டத்தில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

அதேபோல இன்னும் பிற திட்டங்களுக்கு முழுமையாக ஒன்றிய அரசு நிதி வழங்கவில்லை குறிப்பாக மோடி வீடு கட்டும் திட்டத்தில் கூட முழுமையாக நிதி ஒதுக்கப்படாமல் உள்ளது மாநில அரசுதான் பாதி தொகைக்கு மேல் நிதியை வழங்குகிறார்கள்.

ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு ஒருக்கும் நிதியை பொறுத்தவரை மிகப் பெரிய தவறை செய்து வருகிறார்கள். அதனுடைய பாதிப்பை மக்கள்தான் அனுபவிக்கிறார்கள் பாதிப்படையும் மக்கள் எங்களிடம் கேள்வி கேட்கிறார்கள்.

ஏர் இந்தியா விமான நிறுவனம் பராமரிப்பு குறைவாக உள்ளது அவர்களின் சேவைகளில் பல குறைகள் இருக்கிறது. அனைத்து விமான நிறுவனங்களும் தங்களுடைய விமானங்களை முறையாக பராமரிக்கிறார்களா என்பது குறித்து ஒன்றிய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். அதை முறையாக கண்காணிக்கிறார்களா என்பதில் எனக்கு சந்தேகம் இருக்கிறது. இது குறித்து வரும் நாடாளுமன்ற கூட்டத்தவர்களில் விவாதிப்போம்.

இன்று நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் மிகப்பெரிய குறைவாக முன் வைத்தது ஒன்றிய அரசு ஒதுக்கக்கூடிய குறைவான நிதிதான். ஒன்றிய அரசு பல்வேறு நல்ல திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது ஆனால் அந்த திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு போதிய நிதியை அவர்கள் ஒதுக்கவில்லை. தமிழக அரசு தான் கூடுதல் நிதியை ஒதுக்கி அந்த திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஏற்கனவே தமிழக அரசுக்கு நிதி தட்டுப்பாடு அப்படி இருக்கையில் ஒன்றிய அரசும் நிதி ஒதுக்காததால் அதை மிகப்பெரிய சங்கடத்தை தமிழகத்திற்கு தருகிறது என்றார்

பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் அருண் நேரு பேசுகையில்…

பெரம்பலூரில் ரயில்ம நிலையம் அமைப்பது தொடர்பாக ரயில்வேத்துறை உயர் அதிகாரிகளை டெல்லியில் சந்தித்துள்ளேன். அவர்கள் நேர்மறையான பதிலை தான் அளித்துள்ளார்கள் தொடர்ந்து அதை வலியுறுத்தி வருகிறோம். விரிவான திட்ட அறிக்கை விரைவில் சமர்ப்பிக்கப்படும் என அவர்கள் உறுதியளித்து உள்ளார்கள்.

பெரம்பலூரில் ரயில் பாதை ரயில் நிலையம் அமைப்பதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளும் இருக்கிறது வணிக ரீதியாகவும் தொழில்நுட்ப ரீதியாகவும் அனைத்து சாத்தியக்கூறுகளும் இருக்கிறது ஜம்மு காஷ்மீரில் ரயில் பாதை அமைக்கும் பொழுது பெரம்பலூரில் அமைக்க முடியாதா ? என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *