பீகாரின் சிவான் மாவட்டத்தில் பகவான்பூர் காவல் நிலைத்திற்கு உட்பட்ட மதர் கிராமத்தில் சிலரும், சரண் மாவட்டத்தை சேர்ந்த சிலரும் உள்ளூரில் உள்ள ஒரு கடைக்கு சென்று சாராயம் குடித்துள்ளனர். இதனை தொடர்ந்து வீட்டுக்கு சென்ற அவர்களில் சிலருக்கு பார்வை இழப்பு, வாந்தி மற்றும் வயிற்று வலி ஆகிய பாதிப்புகள் ஏற்பட்டது. இதையடுத்து கள்ளச்சாராயம் குடித்த 49 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 28 பேர் பலியானார்கள். மேலும் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.