Skip to content
Home » வேலுமணி என்னோடு தான் இருக்கிறார்…. எடப்பாடி பரபரப்பு பேட்டி

வேலுமணி என்னோடு தான் இருக்கிறார்…. எடப்பாடி பரபரப்பு பேட்டி

  • by Senthil

அதிமுக 53வது ஆண்டு விழாவையொட்டி சென்னையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி அளித்த பேட்டி:

சென்னை உள்ளிட்ட அண்டை மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டது. இன்னும் பல பகுதிகளில் தண்ணீர் வடியாமல் மக்கள் தவிப்பதை பார்க்க முடிகிறது. 20 செ.மீ.மழை பெய்தால் கூட தண்ணீர் தேங்காது என முதல்-அமைச்சரும், அமைச்சர்களும் கூறினர். ஓரளவு பெய்த மழைக்கே ராயபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியத

பெரிதாக மழை பெய்யாததால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கவில்லை. ஒருவேளை தொடர்ந்து மழை பெய்திருந்தால் நம்மால் வெளியே சென்றிருக்க முடியாது. அதிமுக ஆட்சியில் பல  புயல்கள் வந்தன. அப்போது புயல் வேகத்தில் பணியாற்றி மக்களின் பிரச்சினைகளை தீர்த்தோம். 1,840 கி.மீ. அளவுக்கு மழைநீர் வடிகால் பணிகள் அதிமுக ஆட்சியில்நிறைவடைந்தது. எஞ்சிய மழைநீர் வடிகால் பணிகளை திமுக அரசு முடிக்கவில்லை. வடிகால் பணிகளை முழுமையாக செய்திருந்தால் சென்னையில் மழைநீர் தேங்கி இருக்காது.

திருப்புகழ் கமிட்டி அறிக்கை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். வெள்ளை அறிக்கை கேட்டால் முதிர்ச்சி இல்லாமல் பதில் அளிக்கிறார் உதயநிதி ஸ்டாலின். பல்வேறு அமைச்சர்கள் கவனிக்க வேண்டிய துறைகளை துணை முதல்-அமைச்சர் ஒருவரே கவனிக்கிறார். அனுபவம் வாய்ந்த அமைச்சர்களுக்கு பதில் துணை முதல்-அமைச்சர் உதயநிதிமட்டுமே வேலை செய்கிறார்.

ஓபிஎஸ் உள்ளிட்டோர் பிரிந்து சென்றவர்கள் அல்ல, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள். கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களை இனிமீண்டும் சேர்க்க வாய்ப்பே இல்லை. பிரிந்து சென்றவர்கள் இன்று எத்தனையோ அவதாரங்களை எடுக்கிறார்கள். அதிமுக பிரிந்து இருக்கிறது என சொல்லாதீர்கள், அதிமுக ஒன்றுதான். அது நாங்கள்தான். நீக்கப்பட்டவர்களை இணைக்க 6 முக்கிய தலைவர்கள் என்னிடம் பேசியதாக வெளியாகும் செய்தி பொய்.  தம்பி வேலுமணி இங்கு என்னிடம் தான் இருக்கிறார்.ஒருங்கிணைப்பு என்ற வார்த்தையை பயன்படுத்தாதீர்கள். மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு கவர்னர் அரசைப் பாராட்டியது குறித்து அவரிடம்தான் கருத்து கேட்க வேண்டும். நான் எதுவும் சொல்ல முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!