மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உரிய ஆவணங்களின்றி 1000 கிலோ வெடிமருந்து லாரியில் எடுத்துச்செல்லப்பட்டது. கோவில்பத்து நான்கு வழிச்சாலையில் போலீசார் நடத்திய வாகன தணிக்கையில் அந்த லாரி புதுச்சேரியில் இருந்து காரைக்கால் நோக்கி சென்றது தெரியவந்தது. வெடிமருந்து எடுத்து செல்ல உரிய ஆவணங்கள் எதுவும் அந்த லாரியில் இல்லை. எனவே லாரியில் வெடிமருந்து கொண்டு சென்றவரை போலீசார் கைது செய்தனர். வெடிமருந்துகளையும் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.