உலகில் உள்ள அத்தனை தீர்த்தங்களும் ஐப்பசி மாதத்தில் காவிரியில் வந்து கலப்பதாக ஐதீகம். அதனால் ஐப்பசி மாதத்தின் 30 நாட்களும் காவியில் புனித நீராடினால் பாவங்கள் அனைத்தும் நீங்குவதுடன், மன நிம்மதியும் ஏற்படும். ஐப்பசி மாதத்திற்கு துலா மாதம் என்றும் ஒரு பெயர் உண்டு. ஐப்பசி மாதம் காவிரியில் நீராடும் நிகழ்விற்கே துலா ஸ்நானம் என்று பெயர்.
திருச்சி அடுத்த திருப்பராய்த்துறை காவிரியில் நாளை காலை 7 மணி அளவில் பல்லாயிரகணக்கான மக்கள் ஒரே நேரத்தில்காவிரியில் நீராடுவார்கள். பின்னர் அங்குள்ள கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வார்கள்.
இதுபோல ஆங்காங்கே மக்கள் காவிரியில் நீராடுவாா்கள். ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரியிலும் பக்தர்கள் நாளை புனித நீராடுவார்கள். ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நாளை காலை நடைபெறும் திருவாராதனத்திற்கு, அம்மா மண்டபத்தில் இருந்து தங்க குடத்தில் புனித நீர் எடுத்து யானை மீது வைத்து கோவிலுக்கு கொண்டு செல்லப்படும்.