Skip to content
Home » சென்னை ரெட் அலர்ட் வாபஸ்….. பள்ளிகள் திறந்தன…. திருச்சியில் வெயில்

சென்னை ரெட் அலர்ட் வாபஸ்….. பள்ளிகள் திறந்தன…. திருச்சியில் வெயில்

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு இன்று (அக்.16) அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருந்தது. இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வந்தது.

சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களுக்கும் அளிக்கப்பட்ட ரெட் அலர்ட் திரும்பப் பெறப்பட்டதை தொடர்ந்து  இன்று  சென்னை, காஞ்சிபுரம்,  செங்கல்பட்டு  மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் வழக்கம்போல இயங்கும் என்று அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.
அதே போல சென்னையில் பேருந்துகள் வழக்கம்போல இயங்கும் என்று மாநகரப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
திருச்சி மாவட்டத்தில் இன்று காலை 8 மணி அளவில் வெயில் சுட்டெரிக்கத் தொடங்கியது. மழை காலத்திற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை. மக்கள் அன்றாட வாழ்க்கை வழக்கம் போல சுறுசுறுப்புடன் இயங்கியது.

வானிலை மாற்றம் காரணமாக, இன்று பகல் முழுவதும் சென்னை மற்றும் அதன் சுற்றியுள்ள மாவட்டங்களில் மழைப் பொழிவு வெகுவாக குறைந்தது. அதேநேரத்தில், ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. அதாவது, தென்மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு – வடமேற்கு திசையில் மணிக்கு நகர்ந்து வருவதால் தெற்கு ஆந்திராவில் மழை பாதிப்பு அதிகரித்துள்ளது. குறிப்பாக, நெல்லூர் மற்றும் திருப்பதி பகுதிகளின் சில இடங்களில் 20 சென்டிமீட்டர் அளவுக்கு மழை பெய்துள்ளது. இதையடுத்து, நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருமாறு முதல்வர் அலுவலகத்துக்கு முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!