மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு அளிக்கப்பட்டு உள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வு ஜூலை 1ம் தேதியில் இருந்து வழங்கப்படும். இதன் மூலம் மத்திய அரசின் 49.18 லட்சம் ஊழியர்களும், 64.89 லட்சம் ஓய்வூதியர்களும் பயனடைவார்கள். பிரதமர் மோடி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. இதன் மூலம் மத்திய அரசுக்கு ஆண்டுக்கு ரூ.9,448 கோடி கூடுதல் செலவு ஏற்படும்.