அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள மணக்கரை கிராமம் மெயின்ரோட்டுத் தெருவை சேர்ந்தவர் பெருமாள். இவரது மககன்கள் ராஜதுரை (66) மற்றும் பழனிச்சாமி. சகோதரர்கள் இவருக்கும் இடையே இடம் சம்பந்தமாக முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில். ராஜதுரை தனது இடத்தினை சுத்தப் படுத்திக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பழனிச்சாமி ஏன் இடத்தை சுத்தம் செய்கிறாய்? என கேட்டு ராஜதுரையை தகாத வார்த்தைகளால் திட்டி தகராறு செய்ததாக கூறப்படுகிறது.
இதில் வாய் தகராறு முற்றவே, ஆத்திரமடைந்து ஓடி வந்த டூவீலர் மெக்கானிக்கும் பழனிசாமியின் மகனுமான செல்லதுரை (44) என்பவர் மண்வெட்டியால் தனது சித்தப்பா ராஜதுரையை தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த ராஜதுரை ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் ராஜதுரை அளித்த புகாரின் பேரில் செல்லதுரையை கைது செய்ததுடன் அவரது மனைவி இந்திரா, அவரது சகோதரர் அழகுதுரையின் மனைவி வெங்கடேஸ்வரி உள்ளிட்ட 2 பேர் மீதும் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். சித்தப்பாவையே மகன் தாக்கிய இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..
