சென்னைக்கு கிழக்கு-தென் கிழக்கில் 360 கிலோ மீட்டர் தொலைவில் வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 12 கி.மீ. வேகத்தில் நகர்ந்து செல்கிறது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. ஏற்கனவே மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வந்த நிலையில் கடந்த 6 மணி நேரமாக 12 கி.மீ. வேகத்தில் நகர்கிறது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை அதிகாலை புதுச்சேரி – நெல்லூர் இடையே சென்னை அருகே கரையை கடக்கும். இதனால் சென்னையில் அவ்வப்போது மழை பெய்யும்.
இதன் காரணமாக சென்னை மெரினா கடற்கரைக்கு செல்ல பொதுமக்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடற்கரை அணுகு சாலையில் தடுப்புகள் அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சிவப்பு எச்சரிக்கை தொடர்ந்தாலும் அதி கனமழைக்கான வாய்ப்பு குறைவு என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.