மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தல் தேதியை இன்று (அக்.15) மாலை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் வெளியிடப்படுகிறது. இது குறித்த அறிவிப்பின் நிமித்தம் மாலை 3.30 மணியளவில் தேர்தல் ஆணையர்கள் – செய்தியாளர்கள் சந்திப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது .
81 உறுப்பினர்களைக் ொண்ட ஜார்கண்ட் சட்டப்பேரவை பதவிக்காலம் வரும் ஜனவரி 5-ம் தேதியுடன் முடிவடைகிறது. 264 உறுப்பினர்களைக்கொண்ட மகாராஷ்டிரா சட்டபேரவை பதவிக்காலம் வரும் நவம்பர் 26-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில் இந்த இரு மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி இன்று மாலை அறிவிக்கப்பட்டது.
இதற்காக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் மற்றும் தேர்தல் ஆணையர்கள் டில்லியில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது தேர்தல் தேதியை வெளியிட்டனர். அதன்படி மகாராஷ்டிராவில்ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.
மகாராஷ்டிரா வேட்புமனு தாக்கல் வரும் 22ம் தேதி தொடங்கி, 29ம் தேதி வரை நடைபெறுகிறது. 29ம் தேதி மனு தாக்கலுக்கு கடைசி நாள். மனு பரிசீலனை 30ம் தேதி .வாக்குப்பதிவு 20.11.24
வாக்கு எண்ணிக்கை 23.11.24
ஜார்கண்டில் 2 கட்டமாக தேர்தல் நடக்கிறது. நவம்பம் 13ம் தேதி முதல் கட்டமாக 43 தொகுதிகளுக்கும், நவம்பர் 20ம் தேதி 2ம் கட்டமாக 38 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடக்கிறது.
அங்கும் வாக்கு எண்ணிக்கை நவம்பர் 23ம் தேதி முதல்கட்ட தேர்தலுக்கு வரும் 18ம் தேதி ஜார்கண்டில் வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. 2ம் கட்ட தேர்தலுக்கு 22ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. ராகுல் ராஜினாமா செய்த வயநாடு மக்களவை தொகுதிக்கு நவம்பர் 13ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது.