புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் கீழ் உள்ள, பேரிடர் மேலாண்மை அலுவலகத்தில், வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு செயல்பட்டுவரும் மழைக்கால அவசர கட்டுப்பாட்டு அறையின் செயல்பாடுகள் குறித்து, புதுக்கோட்டை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், கல்லூரி கல்வி இயக்குநரக ஆணையருமான .எ.சுந்தரவல்லி, மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா, ஆகியோர் இன்று (15.10.2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மழை நீர் வெளியேற்றப்பட்டு வருவதையும் அவர் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) .அப்தாப் ரசூல், , மாவட்ட வருவாய் அலுவலர் .அ.கோ.ராஜராஜன் , தனி மாவட்ட வருவாய் அலுவலர் (காவிரி-வைகை-குண்டாறு) ஆர்.ரம்யாதேவி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) .முருகேசன், கோட்டாட்சியர் ஐஸ்வர்யா, மாநகராட்சி ஆணையா் நாராயணன், தனி வட்டாட்சியர் (பேரிடர் மேலாண்மை) .எஸ்.செந்தில்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.