Skip to content
Home » வந்தே பாரத் ரயிலில் மோசமான உணவு…. நடிகர் பார்த்திபன் புகார்

வந்தே பாரத் ரயிலில் மோசமான உணவு…. நடிகர் பார்த்திபன் புகார்

  • by Senthil

இந்திய சினிமாவில் மூன்று தசாப்தங்களுக்கும் மேல் வெற்றிகரமாக இயங்கி வருபவர் நடிகர்-இயக்குனர்  ஆர். பார்த்திபன். சினிமா மட்டுமின்றி சமூகத்தில் நடக்கும் அநீதிக்கும் எதிராக குரல் கொடுக்கும் நபர் பார்த்திபன். அதற்கு உதாரணமாக பதிவு ஒன்றை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை  டைரக்டர் பார்த்திபன் சென்னையில் இருந்து கோவைக்கு வந்தே பாரத் ரயிலில் பயணித்தார். அப்போது அந்த ரயிலில்  இரவு 7.22 மணிக்கு வழங்கப்பட்ட  உணவு மற்றும் சிக்கன்  தரமானதாக இல்லை என அவர் புகார் புத்தகத்தில் குறிப்பிட்டு உள்ளார்.

அதில் ” வந்தே பாரத் ரெயிலில் தந்த உணவு தரமாக இல்லை. பயணிகளுக்கு பயனுள்ளதாக இல்லை. ஆரோக்கிய கேடு என சுற்றத்தார் முணுமுணுத்தார்கள். அதனால் நான் புகார்  புத்தகத்தை வாங்கி அதில் சில கிறுக்கல்கள் எழுதி கொடுத்தேன். நான் அதில் தொடர்ந்து செல்லாவிட்டாலும், செல்பவர்கள் பயன் பெறுதல் முக்கியம்” என அதில் பதிவிட்டு உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!