மகாராஷ்டிரா, ஜார்கண்ட் சட்டமன்றங்களில் ஆயுள் காலம் முடிவடைவதால் அங்கு தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பு இன்று மாலை 3.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. இதற்காக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மற்றும் ஆணையர்கள் பத்திரிகையாளர்களை டில்லியில் சந்திக்கிறார்கள். மகாராஷ்டிராவில் 4 கட்டங்களாகவும், ஜார்கண்டில் 2 கட்டங்களாகவும் தேர்தல் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நவம்பரில் வாக்குப்பதிவும், நவம்பர் இறுதியில் ஓட்டு எண்ணிக்கையும் நடைபெறும் என தெரிகிறது.
264 தொகுதிகள் கொண்ட மகாராஷ்டிராவில் பாஜக ஏக்நாத் ஷிண்டே சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது. 81 சட்டமன்றங்கள் கொண்ட ஜார்கண்டில் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா ஆட்சி நடக்கிறது.
இத்துடன் வயநாடு மக்களவைக்கும், உபியில்காலியாக உள்ள 10 சட்டமன்றங்களுக்கான இடைத்தேர்தலும் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.