நடிகர் கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம் கட்சியை நடத்தி வருகிறார். இக்கட்சி நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ்.இளங்கோவனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் மநீம கட்சியின் சமூக வலைத்தள பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த கட்சியின் சமூகவலை தள பக்கத்தில், ஜனவரி 30 ம் தேதி மக்கள் நீதி மய்யம் கட்சியை காங்கிரஸ் கட்சியுடன் இணைக்க உள்ளதாக பதிவிடப்பட்டு இருந்தது. இந்த நிலையில், தங்கள் கட்சியின் வலைத்தள பக்கம் ஹேக் செய்யப்பட்டு இருப்பதாக அக்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.