புதுக்கோட்டை கீழ நான்காம் வீதியில் யூசுப் என்பவர் நடத்தி வரும் சவர்மா கடையில் புதுக்கோட்டையை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் ஷவர்மா வாங்கி சாப்பிட்டு உள்ளனர். 7 வயது சிறுவன் உள்பட அதை சாப்பிட்ட 5 பேருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு வாந்தி, பேதி ஏற்பட்டது. உடனடியாக அவர்கள் 5 பேரும் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். தகவல் அறிந்ததும் அதிகாரிகள்ெ சன்று ஆய்வு செய்தனர். அப்போது ஷவர்மாவில் கெட்டுப்போன கோழி இறைச்சி பயன்படுத்தப்பட்டது கண்டுபிக்கப்பட்டது. உடனடியாக அந்த கடைக்கு சீல் வைக்கப்பட்டது.