வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதால், சென்னை , செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் நாளை பலத்த மழை பெய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே மேற்கண்ட 4 மாவட்டங்களுக்கும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. வெள்ளபாதிப்பு ஏற்படும் என சந்தேகிக்கப்படும் பகுதியில் படகுகள் உள்ளிட்ட மீட்பு உபகரணங்கள் இன்றே தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.