மயிலாடுதுறை புதிய பேருந்து நிலையத்தில் 8 மணியளவில் சின்னங்குடி மீனவ கிராமத்திற்கு அரசு பேருந்து புறப்பட்டபோது படிக்கட்டு அருகே மது போதையில் நின்றிருந்த நபர் சின்னங்குடியை சேர்ந்த முத்தம்மாள் தமிழரசிஎன்ற மீனவ பெண்களிடம் தகராறில் ஈடுபட்டு வந்தார்.
மயிலாடுதுறை நகராட்சி அலுவலகம் அருகே நின்றபோது மீன் கூடையில் இருந்த செல்போன் வைத்திருந்த பையை எடுத்துக் கொண்டு தப்ப வீழ்ந்தபோது படிக்கட்டில் நின்றிருந்த பயணி ஒருவர் மர்ம நபரிடமிருந்து பையை பிடுங்கி மீட்டுள்ளார். அந்த நபரைபயணிகள் மடக்கி பிடிக்க முற்பட்டபோது கீழே கிடந்த கல்லை எடுத்து தாக்கிவிட்டு தப்பிவிட்டார். தகவல் அறிந்து வந்த மயிலாடுதுறை போலீசார் விசாரணை மேற்கொண்டுமர்ம நபரை தேடி வருகின்றனர்.