Skip to content

11ம் வகுப்பு மாணவன் மர்ம மரணம்… போலீஸ் விசாரணை…

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே பாகல்மேடு கிராமத்தைச் சேர்ந்தவர் கல்யாண சுந்தரம். இவரது மகன் கதிர் செல்வன்(16). இவர் உட்கோட்டையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று பள்ளி விடுமுறை என்பதால் வீட்டில் இருந்தவர், வெளியே சென்று வருவதாக கூறிவிட்டு வெளியில் சென்றுள்ளார். இரவு நேரமாகியும் வீட்டிற்கு திரும்பாத கதிர்ச்செல்வனை, அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி உள்ளனர். இந்நிலையில் இவர் ஜெயங்கொண்டம் – சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள குருவாலப்பர் கோவில் பேருந்து நிறுத்தம் அருகே, காலி மனையில் இருந்த கருவேல மரத்திற்கு கீழே மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இதைப்பார்த்த அப்பகுதி பொதுமக்கள் மீன்சுருட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இப்புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மீன்சுருட்டி போலீசார் கதிர்செல்வனின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!