தஞ்சாவூர் வடக்கு வாசல் ஏ.ஒய்.ஏ. நாடார் சாலையைச் சேர்ந்தவர் எஸ். விஜய் பாபு (42). இவர் 7வது வார்டு மாமன்ற திமுக உறுப்பினர்.
அப்பகுதியில் நேற்று மாலை இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதை அறிந்த விஜய்பாபு தகராறு செய்தவர்களை சமாதானப்படுத்துவதற்காக சென்றுள்ளார். அப்போது விஜய் பாபு மற்றும் அவருடன் வந்த காந்தி என்கிற மணிகண்டன் ஆகிய இருவருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. இதில் காயமடைந்த 2 பேரும் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்றனர். இதுகுறித்து மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.