கரூர் மாவட்டம் மாயனூர் கதவணைக்கு வரும் நீரின் அளவு 15,339 கன அடி – காவேரி ஆற்றில் 15,039 கன அடி நீர் வெளியேற்றம்.
மேட்டூர் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணையிலிருந்து உபரி நீர் காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த நிலையில் கரூர் மாவட்டம் மாயனூர் காவேரி ஆற்றில் இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 15,339 கன அடி தண்ணீர்
வந்து கொண்டுள்ளது. அதில் 15,039 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றிலும், 300 கன அடி தண்ணீர் புதிய கட்டளை மேட்டு வாய்க்காலிலும் பாசனத்திற்காக திறக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்றைய விட இன்று காவிரி ஆற்றில் நீர்வரத்து ஒரே நாளில் 4,000 கன அடி நீர் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.